டோலிவுட்டில் எல்லாரும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை… சாய் பல்லவியின் பேச்சால் ஏற்பட்ட சர்ச்சை!

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார். இவருக்கு தமிழை விட மலையாளம், தெலுங்கில் ரசிகர்கள் ஏராளம்.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து இளைஞர்களின் மனம் கவர்ந்த சாய் பல்லவி அதன் பின்னர் அசுர வேகத்தில் சினிமாவில் வெற்றிநடை போட ஆரம்பித்தார். தமிழில் என்ஜிகே மற்றும் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சாய் பல்லவி பொதுவெளிகளில் அவ்வளவாக தலை காண்பிக்கமாட்டார். பேட்டி கொடுக்கும் விஷயத்திலும் அப்படியே!

சாய் பல்லவி கடைசியாக பாவக் கதைகள் அந்தாலஜி படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ளார். அதில் பிரகாஷ் ராஜ் உடன் நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

தற்போது சாய் பல்லவி பேசிய நேர்காணலில், மழையாளத் திரை உலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கு உள்ள வேறுபாடுகளை தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

அதில் மலையாளத்தில் அனைத்து நடிகர்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள். அங்கு சின்ன நடிகர்கள் பெரிய நடிகர்கள் என்ற வேறுபாடு இல்லை. ஆனால் தெலுங்கில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நடத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பிறமொழி நடிகைகள் சமமாக நடத்தப்படுவதில்லை. சாய் பல்லவியின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.