போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்!

கன்னட நடிகை மற்றும் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.


பாலிவுட்டை அடுத்து தென்னிந்திய சினிமாவிலும் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சில மாதங்களுக்கு முன்பு கன்னடத் திரையுலகில் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும், தொழிலதிபர்கள் மூலம் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

அதைத்தொடர்ந்து தற்போது நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் மூன்று மாதம் வைக்கப்பட்டிருந்தார். அப்போது இரண்டு முறை அவரது ஜாமீன் மனு நிராகப்பிரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கர்நாடக நீதிமன்றம் இன்று மருத்துவக் காரணங்கள் அடிப்படையில் சஞ்சனா கால்ரானிக்கு ஜாமீன் வழங்கியுள்ளதுடன், மூன்று லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு உத்திரவாதங்களுடன் ஜாமீன் தொகையை டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அவர் ஒவ்வொரு வாரமும் ஒரு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், மேலும் இந்த வழக்கில் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதே போதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு நடிகை ராகினி திவேதியுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

Leave a Comment

Your email address will not be published.