எக்ஸ்பிரஸ் வேகத்தில் படங்கள் கமிட் ஆகும் சந்தானம்!

சந்தானம் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது.

அறிமுக இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இவர் இயக்குனர் அறிவழகனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தை ஆர்.கே. என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் சந்தானத்தின் அப்பாவாக நடிக்கிறார்.

ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கியது. கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து பேசிய ஸ்ரீனிவாசன் “இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது. காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை – மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்துவைக்கும். ஒரு தந்தைக்கும் – மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்து வந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்.

ஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம். மேலும், படத்ததை பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.
கும்பகோணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்.

இதற்கிடையில் சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.