பிரஷாந்த் படத்திலிருந்து இளையராஜா மாற்றம்… புதிதாக இணைந்த இசையமைப்பாளர்!

பிரஷாந்த் நடிக்க இருக்கும் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜாவுக்குப் பதில் வேறொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2018-ம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அந்தாதுன் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். பிரஷாந்த் இந்த தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இயக்குனர் மோகன்ராஜா தான் முதலில் இப்படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார். அதையடுத்து ஜோதிகாவை வைத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜேஜே பிரெட்ரிக் என்பவர் இப்படத்தின் இயக்குனராக இணைந்தார்.

தமிழில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. கடைசியாக நடிகை சிம்ரன் இப்படத்தில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து இப்படத்தில் இளையராஜா இசையமைக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இளையராவுக்குப் பதில் வேறொரு இயக்குனர் இப்படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆம், தற்போது சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.