ஆர்யா பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய சார்பட்டா படக்குழுவினர்!

‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினர் இன்று ஆர்யா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கலையரசன், துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இதில் ஆர்யாவும் கலையரசனும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் பிறந்தநாளை சார்பட்டா படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். அதே போல் இன்று ஆர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து சார்பட்டா படக்குழுவினர் கேக் வெட்டி ஆர்யா பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். ஆர்யா இந்தப் படத்தில் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதால் கேக்கில் ஆர்யா 30 கபிலன் என்று எழுதுயுள்ளனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் இயக்குனர் ரஞ்சித், நடிகர் பசுபதி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் பங்கு பெற்றுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published.