‘சாணிக் காயிதம்’ கதை வேற லெவலில் இருக்கிறது… செல்வராகவனே புகழ்ந்து தள்ளிய இயக்குனர்!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து ‘சாணிக்காயிதம்’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தற்போது செலவராகவன் இந்தப் படத்தின் கதையை முழுமையாக படித்து முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் “சாணிக்காயிதம் படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துப் பார்த்தேன். மிகவும் அற்புதமான ஸ்கிரிப்ட்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இந்தப் கொள்ளைக்காரர்களாக நடித்துள்ளனர். இப்படம் கிரைம் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published.