திரைத்துறையில் அதிர்ச்சி: பாண்டியர் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விஜே சித்ரா இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல நிகழ்ச்சிகளில் விஜே-வாகப் பணியாற்றிய சித்ரா பின்னர் சின்னத்திரை நடிகையாக மாறினார். பல தொலைக்காட்சிகளிலும் விஜேவாக பணியாற்றியுள்ள சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.


சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஹேம்நாத் உடன் நசரத்பேட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது சித்ரா இன்று அதிகாலையில் அந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சித்ரா தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.