விஜய்க்கு போட்டியாக மாறும் சிம்பு!

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளனர்.

Image

தற்போது ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஈஸ்வரன் படமும் பொங்கல் ரேஸில் இணைந்திருப்பதால் பொங்கல் இன்னும் சிறப்பானதாக அமையும் என்று எதிர்பபார்க்கப்டுகிறது.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து கவுதம் கார்த்திக் உடன் பத்து தல என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.