சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சுதா கொங்கரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து, சுதா கொங்கரா அடுத்து யாரை இயக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது சுதா கொங்கரா அடுத்து சிம்புவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த சிம்பு 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து மீண்டும் ஃபிட் ஆக மாறி கெத்து காட்டினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவை மீண்டும் வின்டேஜ் தோற்றத்தில் பார்ப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் உடன் பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் பரவ ஆரம்பித்தவுடன் இந்தக் கூட்டணி இணைந்தால் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் காம்போ தான் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.