‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவிருப்பதாக க் கூறப்படுகிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தது என்றும் சொல்லலாம். மேலும் இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இப்படம் பிளாக் காமெடி ரகத்தில் வெளியானது. தமிழில் பிளாக் காமெடி ஜேர்னரில் மக்களால் ரசிக்கப்பட்ட படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கப் போவதில்லையாம். யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் சத்யராஜ் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொஞ்ச நக்கலான ஆளா தேடியிருப்பாங்க போல…!

Leave a Comment

Your email address will not be published.