செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் இணைந்த தமன்னா!?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் யாவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் காவியக் கதைகளாக தமிழ் சினிமா ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று பலர் குரலெழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இருவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அப்டேட் அமைந்தது. மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. அப்படதிற்கு நானே வருவேன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் இணையவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதில் நடிகை தமன்னா ஒரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நடிகை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னா படிக்காதவன், வேங்கைஆகிய படங்களில் தனுஷுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published.