வலிமை படத்தில் அஜித்தின் அம்மாவாக நடிப்பது இந்த நடிகையா!?

‘வலிமை’ படத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலலாகி வருகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வையின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக சங்கமித்துள்ளனர். எனவே இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது வலிமை படம் முழுவீச்சில் உருவாகி வருகிறது. ரேஸிங் கதையை மையமாகக் கொண்டு படம் உருவாகி வருவதாகவும் படத்தில் அஜித் பல ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Image

நீண்ட நாட்களாக வலிமை படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் கடுப்பில் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். போனி கபூரையும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜித் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சியின் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாக்களை அதிரச் செய்தது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்திலிருந்து புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. குடும்பப் புகைப்படம் போல் உள்ளது. அதில் அஜித் உட்பட சில நடிகர்கள் உள்ளனர். மூத்த நடிகை சுமித்ரா அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறார். எனவே அவர் இப்படத்தில் அஜித்தின் அம்மாவாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.