சிம்பு, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிம்பு தற்போது ‘மாநாடு’ படப்பிடிப்பில் மும்மரமாக நடித்து வருகிறார். பாண்டிசேரியில் படப்பிடிப்பு முடிந்து தற்போது ஏற்காட்டில் நடந்து வருகிறது. லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் முப்தி படத்தின் தமிழ் ரீமேக் டைட்டில் நாளை வெளியாக இருப்பதாக டிசம்பர் 24 நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். பல மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படம் அப்படியே முடங்கியது. தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டு படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ட்ரெண்ட் நாயகன் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இருவருடன் எங்களின் 20-வது திட்டத்தில் பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார்.” என்று ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

மாநாடு படத்தின் தற்போதைய படப்பிடிப்பை முடித்த பின்னர் சிம்பு இப்படத்தில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.