அஜித் ரசிகர்களும் ‘வலிமை’ மிகவும் ஸ்பெஷலான படமாக இருக்கப்போகிறது… ஏன் தெரியுமா!?

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படம் அஜித் பிறந்தநாள் தினத்தில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தல அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரேஸிங்கை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

Image

வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களை திணறடித்து வருகின்றனர். தற்போது வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் வலிமை படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அது அஜித்தின் 50-வது பிறந்தநாளும் கூட. எனவே அந்த தினத்தில் படம் ரிலீஸ் ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டமாக அமையும் என்றே சொல்லலாம்.

சமீபத்தில் வலிமை படத்தின் அப்டேட் வரும் வரை ரசிகர்கள் அமைதி காக்குமாறு படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர். இன்னும் 20 சதவீத படபிடிபி மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.