‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி உறுதி!?

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அஜித் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வையை அடுத்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் அதிகளவில் ஸ்டண்ட் மற்றும் ரேஸிங் காட்சிகள் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

Image

வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் படக்குழுவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாக்கள் திணறி வருகிறது.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகையின் அந்த இடத்தில் கை வைத்த ஆசாமிகள்… நடிகையின் மூன்று பக்க வேதனைப் பதிவு!

தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது #ValimaiMotionPoster என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வலிமை படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அது அஜித்தின் 50-வது பிறந்தநாளும் கூட. எனவே அந்த தினத்தில் படம் ரிலீஸ் ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.