மிஸ்டர் லோக்கல் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜிவி பிரகாஷ்!

இயக்குனர் ராஜேஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜேஷ் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை இயக்கியிருந்தார். அப்படம் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. அதையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜேஷ் இயக்கத் தயாராகி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

தற்போது ராஜேஷ் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர். அதனால் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜீவா மற்றும் ஜிவி சேர்ந்து நடிக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராஜேஷ் கூட்டணியில் கடவுள் இருக்கான் குமாரு படம் வெளியானது. இப்படமம் கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றது.

ஜீவா நடிப்பில் உருவாக இருக்கும் படம் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடத் தயாராகி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.