முதல்வரை சந்தித்த விஜய்… நாளை மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் ரிலிஸுக்குத் தான் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜனவரி 13-ம் தேதி மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் தணிக்கை குழுவிலிருந்து மாஸ்டர் படத்திற்கு ‘யு / ஏ’ சான்றிதழ் கிடைத்தது.

Image

தற்போது விஜய் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகளில் 100% இருக்கைகளை அனுமதி செய்யக் கோரி முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அரசு தனது முடிவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக இருக்கைகளுக்கு அனுமதி அளிக்காவிட்டாலும் தற்போது உள்ள அளவிலிருந்து சற்று உயர்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜு மாஸ்டர் படக்குழு கேட்டால் பொங்கலுக்கு சிறப்பு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் 50% இருக்கைகளுடன் செயல்பட்டு வரும் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய அப்டேட் நாளை மதியம் 12.30 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.