சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி முதன்முதலாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் படத்திலே தரமான இயக்குனர் என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டார் லோகேஷ் கனகராஜ். தற்போது மாநகரம் படம் இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது.

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே புலி, இருமுகன், சாமி 2 உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்தி ரீமேக்கில் நடிகர் விக்ராந்த் மாசே ஒரு நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவென்று கூறலாம். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி இப்படத்தில் தனது சொந்தக் குரலில் டப்பிங் கொடுக்கிறாராம்.

தற்போது இந்தப் படத்தின் டைட்டில் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.