விரைவில் அரசியலில் களமிறங்கும் விஜய்!? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை!

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சில நாட்களுக்கு முன்பு விஜயின் மக்கள் இயக்கம் பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் பதிவு செய்தார். இதனால் விஜய் அரசியலில் களமிறங்கப்போகிறார் என்று செய்திகள் பரவ ஆரம்பித்ததை அடுத்து விஜய் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தார். மேலும் அக்கட்சி தனது அப்பா தொடங்கியுள்ளார் என்ற காரணத்திற்காக ரசிகர்கள் அக்கட்சியில் இணைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விஜயின் அம்மாவும் அக்கட்சியிலிருந்து விலகினார்.

vijay-makkal-iyakkam-23
Vijay

தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அரசியலில் களமிறங்கத் தயாராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் விஜய் அதில் ஆர்வம் காண்பிக்கவில்லையாம். அதனால் மக்கள் இயக்க நிர்வாகிகள் தாங்களாகவே அரசியல் பணிகளைத் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


சமீபத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர்களுடன் தொலைபேசியில் மட்டுமே பேச முடிந்தது. விஜய் அலுவலக பொறுப்பாளர்களுடன் பேசியதாகவும், மற்ற அரசியல் கட்சிகளில் சேர வேண்டாம் என்றும், அவர்கள் விரும்புவது விரைவில் நடக்கும் என்றும் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.