செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது, மக்களைக் காப்பாற்றுங்கள்… முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கோரிக்கை!

பிரபல தமிழ் நடிகர் விஜயகுமார்  முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம்  ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியின் கரையில் வசிக்கும் மக்களை காப்பாற்ற வேண்டி நடிகர் விஜயகுமார் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். 


“நான் பல வருடங்களாக சென்னை ஈக்காட்டுத்தாங்காலில் உள்ள கலைமகள்  நகரில் வசித்து வருகிறேன். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து   நீர் திறந்துவிடப்பட்ட போது, ​​எங்கள் பகுதியிலிருந்து அடையார் வரை பல வீடுகள் மீளமுடியா சேதத்தைச் சந்தித்தன. உயிர் இழப்பும் ஏற்பட்டது.

இந்த ஆண்டு, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியைத் தாண்டியுள்ளது. இதே போல் தொடர்ந்தால், 2015 ஆம் வருடத்தைப் போல  ஒரு சூழ்நிலையை நாங்கள் சந்திக்க நேரிடும் என்று தோன்றுகிறது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏரியின் கரையில் வசிப்பவர்கள் இல்லாத வகையில் சிறிய அளவிலான தண்ணீரை வெளியிடுமாறு நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தமிழக மக்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றியதைப் போலவே கரையில் வாழும் மக்களையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.