ட்விட்டரில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் விஜய்… இந்த முறை என்ன தெரியுமா!?

நடிகர் விஜய் தற்போது இந்தியாவின் முன்னணி நடிகராக உருவெடுத்து வருகிறார். நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றனர். விஜயின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவரது ஒவ்வொரு படத்தின் அப்டேட்களும் சமூக வலைத்தளங்களை ஆர்ப்பரித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது மாஸ்டர் படம் ட்விட்டரில் மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. 2020-ம் ஆண்டு அதிகமான ஹாஷ்டாக் செய்யப்பட்ட படங்களில் மாஸ்டர் முத்லிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன வக்கீல் சாப் படம் இடம் பெற்றுள்ளது. மூன்றாவதாக அஜித் நடித்து வரும் வலிமை படம் இடம் பிடித்துள்ளது. சூரரைப்போற்று படம் 5-ம் இடமும், ரஜினி நடித்த தர்பார் படம் 10-ம் இடமும் பிடித்துள்ளது.

அதே போல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர்கள் லிஸ்டில் விஜய் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபு முதலிடம் பிடித்துள்ளார். சூர்யா ஐந்தாம் இடமும், தனுஷ் 8-ம் இடமும் பிடித்துள்ளனர்.

இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் , ‘பிகில்’ படங்கள் ஆகியவை 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டின் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டாக்குகள் என்ற சாதனை படைத்தன. தற்போது மாஸ்டர் படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிகைஉள்ளார் .

Leave a Comment

Your email address will not be published.