நவீன ரக துப்பாக்கியுடன் மிரட்டும் விஷால்… ‘எனிமி’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா அவருக்கு வில்லனாகவும் நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

தற்போது எனிமி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் விஷால் கையில் ஒரு நவீன ரக துப்பாக்கி வைத்து மிரட்டலாக காணப்படுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா “வர சொல்லு பார்க்கலாம்” என்று அறிவித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. தற்போது சென்னையில் பெரிய செட் அமைக்கப்பட்டு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விஷால் ‘சக்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை அறிமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் ரெஜினா, கெஸன்ட்ரா ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.