விஷ்ணு விஷால் பெயரில் நடைபெற்று வரும் மோசடி… மக்களுக்கு எச்சரிக்கை!

தற்போது சோசியல் மீடியாக்களில் இல்லாதவர்களே கிடையாது என்றே சொல்லலாம். மக்கள் தங்கள் பெரும்பாலான நேரங்களில் சோசியல் மீடியாக்களில் மூழ்கியுள்ளனர். அதேவேளையில் இதனால் பல ஆபத்துகளும் ஏற்படுகின்றன. பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்.

தற்போது விஷ்ணு விஷாலுக்கும் இது நடந்துள்ளது. விஷ்ணு விஷால் பெயரில் போலி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டு ஏமாற்று வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதை அறிந்த அவர், அது பற்றி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். அந்தப் போலி கணக்கில் விஷ்ணு விஷால் படத்திற்கு நடிகைகளைத் தேர்ந்தெடுத்து வருவதாகக் கூறி பல பெண்களிடம் பேசியுள்ளார்.

இந்த போலி கேஸ்டிங் அழைப்புகளை அறிந்த விஷ்ணு விஷால், இன்ஸ்டாகிராம் மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துகொண்டு, ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” நடிகையாக வேண்டும் என்று ஆர்வமுள்ள அனைவருக்கும். தவறான காரணங்களுக்காக எனது பெயரை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கும் சில நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். அத்தகையவர்களையும் அத்தகைய முட்டாள்தனத்தையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த நேரத்தில் நான் எனது சொந்த பேனரில் எந்த திரைப்படமும் செய்யவில்லை. விரைவில் புகார் அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.