கதாநாயகியான சித்ரா… அதைப் பார்க்க அவரில்லையே… சோகத்தில் படக்குழுவினர்!

மறைந்த நடிகை சித்ரா முதன்முறையாக கதாநாயகியாக நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜே-வாக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் சின்னத்திரை நடிகையாக உருவெடுத்தார் சித்ரா. பல தொலைக்காட்சிகளிலும் விஜேவாக பணியாற்றியுள்ள சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரம் தான் படு பேமஸ்.

சித்ராவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயம் ஆனது. இந்நிலையில் ஹோட்டலில் ஹேம்நாத் உடன் தங்கியிருந்த சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அனைவர்க்கும் பேரதிர்ச்சியை அளித்தது. சித்ராவின் பிரிவைத் தாங்கமுடியாமல் தமிழக மக்கள் மற்றும் அவருடன் பழகியவர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் தெரிவித்து வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சித்ரா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கால்ஸ் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த சமயத்தில் சித்ரா உயிரோடு இல்லாதது படக்குழுவினரை வேதனை அடையச் செய்துள்ளது.

இப்படத்தில் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்சினி, வினோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published.