சித்ராவுடன் டேட்டிங் செய்தேனா? மனம் திறந்த ரக்ஷன்!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் விஜய் டிவி ரக்ஷனுக்கும் சம்மந்தம் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவதை அடுத்து இதுகுறித்து ரக்ஷன் மனம் திறந்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தான் தங்கியிருந்த தனியார் ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அங்கு சித்ராவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஹேம்நாத் என்பவரும் உடன் இருந்தார். தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ரா கொலை செய்யப்பட்டார் என்று பலரும் தெரிவித்து வந்தனர். இருப்பினும் அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டது.

Image

இதற்கிடையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விஜே ரக்ஷன், சித்ராவுடன் டேட்டிங் செய்ததாகவும் நெருக்கமாக பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ரக்ஷன் இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வைத்து மிரட்டியது தான் சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியது என்றும் பல செய்திகள் வெளியாகின.

தற்போது ரக்ஷன் இந்த செய்திகள் குறித்து போன் கால் மூலமாக தெளிவு படுத்தியுள்ளார். “நானே குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறேன். சித்ராவுடன் நான் டேட்டிங் செய்ததாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய். சித்ரா எனது நல்ல நண்பர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.