பாவக்கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தைப் பார்த்து வியந்த சூர்யா!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவிருக்கும் ‘பாவகதைகள்’ அந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கியுள்ள தங்கம் பகுதியைப் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா வியந்து பாராட்டியுள்ளார்.

பாவ கதைகள் அந்தாலஜி படத்தில் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், சுதா கொங்குரா, மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நால்வர் இணைந்து பாவக் கதைகள் என்ற படைப்பை உருவாக்கியுள்ளனர். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை டிசம்பர் 18) வெளியாகவிருக்கிறது.

காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றால் மனித வாழ்வில் நடக்கும் துயரங்களை எடுத்துக் கூறுவதாக இப்படம் உருவாகியுள்ளது. பாவக் கதைகள் ட்ரைலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Image

இப்படத்தில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ பகுதியில் பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது சுதா கொங்கராசாவின் தங்கம் பகுதியை நடிகர் சூர்யா பார்த்துள்ளார். அதையடுத்து படக்குழுவினரைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

மறுபடியும் புதிய உலகம்… தங்கம், எவ்வளவு அருமையான கதை… மிகவும் ரசித்தேன்” என்று தெரிவித்துள்ளார். நாளை பாவக்கதைகள் படம் வெளியாவதை அடுத்து படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.