திருமண நாளில் 90’ஸ் காஸ்டியூமில் மனைவியுடன் ஆட்டம் போட்ட பிரபல மலையாள நடிகர்!

மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் தனது 18 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மனைவியுடன் நடமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் இந்திரஜித் சுகுமாரன். இவர் 2002-ம் ஆண்டு பூர்ணிமா நேர காஸ்டியூம் டிசைனரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு பிரார்த்தனா மற்றும் நக்ஷத்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

நேற்று இந்தத் தம்பதி தங்களின் 18-வது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினர். அதையடுத்து பூர்ணிமா இந்திரஜித் தனது கணவர் இந்திரஜித்துக்கு உணர்வுபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டார். ” எங்களுக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது முற்றிலும் சட்டபூர்வமானது! ஜா சிம்ரன் … ஜா !! ஜீ லெ அப்னி ஜிந்தகி !! ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் ரெட்ரோ காஸ்டியூம் அணிந்துகொண்டு நடனமாடிய விடீயோவையும் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து இந்திரஜித்தும் தனது மனைவிக்கு ஒரு இதயப்பூர்வமானப் பதிவு ஒன்றை வெளியிட்டார். “இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால் எங்கள் காதல் அதை விட வலிமையானது. இன்னும் நீண்ட காலத்திற்கு வேடிக்கை, சிரிப்பு மற்றும் தோழமை தொடரும்… இங்கே எங்களுக்கும் பிரகாசமான ஆண்டிற்கும். எனது வலிமையின் தூணாக இருந்ததற்கு நன்றி! உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் திருமண நாள் வாழ்த்துக்கள், என் அன்பே” என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Ƥσσяиιмα Ɩи∂яαʝιтн (@poornimaindrajithofficial)

பூர்ணிமா 2019 ஆம் ஆண்டு வெளியான ‘வைரஸ்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவின் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதில் இந்திரஜித்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவாகிவரும் ‘துராமுகம்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.