அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போடச் சென்ற அசுரன் நடிகை: அப்புறம் என்ன நடந்தது தெரியுமா!?

நடிகை மஞ்சு வாரியர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போடச் சென்றுள்ளது கேரளத்தில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

அசுரன்நடுங்கி நடிகை மஞ்சு வாரியர் இன்று கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடச் சென்றுள்ளார். அப்போது வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச் செல்லவில்லை. அதனால் அவரை அதிகாரிகள் ஒட்டு போட அனுமதிக்கவில்லை. பின்னர் மீண்டும் வீட்டுக்குச் சென்று தனது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வந்து ஓட்டு போட்டுள்ளார்.

மஞ்சு வாரியர் எப்போதும் தேர்தலில் ஓட்டுபோடத் தவறுவதில்லை. எனவே இந்தத் தேர்தலிலும் ஓட்டு போடுவதற்கு தனது தாயாருடன் காலையிலேயே ஓட்டு போட வாக்குச் சாவடிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வாக்குச்சாவடியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். ஐந்து நிமிடங்களுக்கும் மேல் வரிசையில் நின்ற மஞ்சு வாரியர் பூத் உள்ளே நுழைந்த போது அதிகாரிகள் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளனர். அப்போது தான், அடையாள அட்டை எடுத்துவர மறந்ததை மஞ்சு உணர்ந்துள்ளார். பின்னர் அருகிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று அடையாள அட்டை எடுத்துவந்து ஓட்டு போட்டுள்ளார். இந்த சம்பவம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published.