ஆன்மிகப் பயணம் செய்த அனுஷ்கா… வைரலாகும் படகு பயணப் புகைப்படங்கள்!

நடிகை அனுஷ்கா ஆன்மிக வழிபாட்டிற்காக கோவிலுக்குச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது நடிகைகள் பலரும் ஆன்மிகத்தில் ஐக்கியம் ஆகி வருகின்றனர். அமலா பால் நவராத்திரியில் பல்வேறு அவதாரங்களில் வந்து ரசிகர்களுக்கு ஆன்மிக போதனை அளித்தார். அதே போல் சில நாட்களுக்கு முன்பு நடிகை நந்திதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தார். சஞ்சிதா ஷெட்டி தடை செய்யப்பட்ட போதும் திருவண்ணாமலை மலை மேல் ஏறி தீப வழிபாடு செய்தார். திருப்பதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என திரைத்துறை பிரபலங்கள் கடவுளைத் தரிசிக்க கோவில்களுக்குச் செல்வது வழக்கம்.

தற்போது நடிகை அனுஷ்கா ஷெட்டி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள போலவரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்ய படகில் பயணித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிசியாக நடித்து வரும் அனுஷ்கா ஆன்மிகத்திற்காகவும் சிறிது நேரம் ஒதுக்கியிருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டி போலவரத்தின் பட்டிசீமா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்று சிறப்பு சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். தனது நண்பர்களுடன் அனுஷ்கா இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பாஹுபலி படத்தில் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளரான பிரசாந்தி திப்பிர்னேனி, விஷ்வக் சென் மற்றும் பிரசாந்த் வர்மா ’இயக்குனர் ஏ.வி. அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் அந்தப் படகு புகைப்படத்தில் இடம் பிடித்துள்ளனர். தற்போது அனுஷ்காவின் இந்த ஆன்மிக விஜயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.