‘கேஜிஎஃப் 2’ படத்தில் வில்லனாக நடிக்கும் பாலகிருஷ்ணா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ‘கேஜிஎஃப் 2’ இனாயத் கலீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது.

கேஜிஎஃப் முதல் பக்கத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. கொரோனாவால் முடங்கிய இரண்டாம் பாகத்தின் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்கு இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே கேஜிஎஃப் 2 படம் பற்றிய அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8-ம் தேதி அன்று கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 21-ஆம் தேதி இப்படத்தின் கூடுதல் அப்டேட் ஒன்றும் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தனர்.

இப்படத்தின் ஆதிரா என்ற மிரட்டல் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இப்படத்தில் இனாயத் கலீல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகப் பேசப்படுகிறது. கூகிளில் கேஜிஎஃப் 2 படத்தின் நடிகர்கள் என்று தேடினால் அதில் பாலகிருஷ்ணா இனாயத் கலீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் காண்பிக்கிறது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது உண்மையானால் வேற லெவல் ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இடம் பெறும் என்று ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.