ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட ஒன்றரை கோடி கேட்ட நடிகை… ஷாக் ஆன படக்குழு!

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட 1.5 கோடி ஊதியம் கேட்டதாகக் டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் சந்தனக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இப்படம் இந்திய அளவில் வெளியாக இருப்பதால் பாலிவுட் நடிகை ஒருவரை களமிறக்கினால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று திட்டமிட்டு நடிகை திஷா பதானியை ஒரு பாடலுக்கு நடனமாட கேட்டுள்ளனர். அவர் சொன்ன சம்பளம் தான் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டதாம். ஆம், திஷா ஒரு பாடலுக்கு நடனமாட ஒன்றரை கோடி கேட்டிருக்கிறார்.

எம்எஸ் தோனி படத்தில் நடித்த பின்னர் திஷாவுக்கு மார்க்கெட் கூடிவிட்டது. எனவே தற்போது தென்னிந்திய படங்களிலும் அதிக வரவை திஷா எதிர்பார்க்கிறார் போல!

Leave a Comment

Your email address will not be published.