‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கின் முன்னோட்டம்… வெங்கடேஷின் ‘நாரப்பா’ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா!?

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து அவர் நடித்துவரும் நாரப்பா படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தமிழில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் நாரப்பா.

Image

அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு அசாத்தியமாக இருக்கும். துடிப்புமிக்க இளைஞராகவும் பொறுப்புள்ள அப்பாவாகவும், கணவராகவும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தனுஷின் நடிப்பைக் கண்டு வியக்கதோர் இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு வலிமையான கதைக்களத்தை ஒற்றை ஆளாக தாங்கி நின்று ஜெயித்துக் காட்டினார் தனுஷ்.

எனவே இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, அதில் வெங்கடேஷ் நடிக்கப் போகிறார் என்றதும், தமிழில் அசுரன் ஏற்படுத்திய தாக்கத்தையும் கதைக்களம் கொண்டிருந்த கனத்தையும் தெலுங்கு ரீமேக்கில் பூர்த்தி செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

தற்போது வெளியாகிய முன்னோட்டத்தைப் பார்க்கும்போது வெங்கடேஷ் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று பலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கில் இப்படத்தை ஸ்ரீகாந்த் அடலா என்பவர் இயக்குகிறார். சுரேஷ் பாபு மற்றும் கலைப்புலி எஸ் தாணு இணைந்து தயாரிக்கின்றனர். மணி சர்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.