கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா !

“கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சூடுபிடிக்கப்பட்டுள்ளுது. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு இணைசேர்ந்துள்ளார். அவர் இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார்.

மேலும் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தின் முழுக்கதாப்பத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் இந்த வித்தியாசமான கதாப்பாத்திரத்திடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பெரும் காமெடி கலந்த கலாட்டாவாக அமைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) கதாப்பாத்திரம் மீது பரிதாபம் தோன்றுவதாகவும் அது மேலும் நகைச்சுவை உண்டாக்கும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மஹத், ஐஸ்வர்யா, யோகிபாபு இவர்களுடன் நடிகை சாக்‌ஷி அகர்வால் கண்கவர் பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை இயக்குநர் பிரபு ராம் C இயக்கியுள்ளார். மேலும் படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

Leave a Comment

Your email address will not be published.