Tollywood

ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட ஒன்றரை கோடி கேட்ட நடிகை… ஷாக் ஆன படக்குழு!

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட 1.5 கோடி ஊதியம் கேட்டதாகக் டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் சந்தனக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படம் இந்திய அளவில் வெளியாக இருப்பதால் …

ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட ஒன்றரை கோடி கேட்ட நடிகை… ஷாக் ஆன படக்குழு! Read More »

‘கேஜிஎஃப் 2’ படத்தில் வில்லனாக நடிக்கும் பாலகிருஷ்ணா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ‘கேஜிஎஃப் 2’ இனாயத் கலீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. கேஜிஎஃப் முதல் பக்கத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. கொரோனாவால் முடங்கிய இரண்டாம் பாகத்தின் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்கு இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே கேஜிஎஃப் 2 படம் பற்றிய அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக …

‘கேஜிஎஃப் 2’ படத்தில் வில்லனாக நடிக்கும் பாலகிருஷ்ணா! Read More »

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் மோகன்ராஜா… நடிக்கப்போவது யார் தெரியுமா!?

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் படத்தை மோகன்ராஜா இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படம் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. பிரித்விராஜ் தான் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலே 100 கோடி வசூல் படம் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். அதையடுத்து லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக அறிவித்தனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இப்படத்தில் முதலில் வேறு பல இயக்குனர்கள் இயக்கவிருப்பதாக …

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் மோகன்ராஜா… நடிக்கப்போவது யார் தெரியுமா!? Read More »

தொடாத இடமே கிடையாது… பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்கும் ரஷ்மிகா!

நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரஷ்மிகாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. ரஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துவிட்டார். தெலுங்கு அல்லாமல் மற்ற மொழி படங்களிலும்பல படங்களில் நடித்து வருகிறார் ரஷ்மிகா. தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்மிகா பாலிவுட்டிலும் …

தொடாத இடமே கிடையாது… பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்கும் ரஷ்மிகா! Read More »

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கின் முன்னோட்டம்… வெங்கடேஷின் ‘நாரப்பா’ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா!?

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து அவர் நடித்துவரும் நாரப்பா படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தமிழில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் நாரப்பா. அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு அசாத்தியமாக இருக்கும். துடிப்புமிக்க இளைஞராகவும் பொறுப்புள்ள அப்பாவாகவும், கணவராகவும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தனுஷின் நடிப்பைக் கண்டு வியக்கதோர் …

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கின் முன்னோட்டம்… வெங்கடேஷின் ‘நாரப்பா’ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா!? Read More »

ஆன்மிகப் பயணம் செய்த அனுஷ்கா… வைரலாகும் படகு பயணப் புகைப்படங்கள்!

நடிகை அனுஷ்கா ஆன்மிக வழிபாட்டிற்காக கோவிலுக்குச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது நடிகைகள் பலரும் ஆன்மிகத்தில் ஐக்கியம் ஆகி வருகின்றனர். அமலா பால் நவராத்திரியில் பல்வேறு அவதாரங்களில் வந்து ரசிகர்களுக்கு ஆன்மிக போதனை அளித்தார். அதே போல் சில நாட்களுக்கு முன்பு நடிகை நந்திதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தார். சஞ்சிதா ஷெட்டி தடை செய்யப்பட்ட போதும் திருவண்ணாமலை மலை மேல் ஏறி தீப வழிபாடு செய்தார். திருப்பதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் …

ஆன்மிகப் பயணம் செய்த அனுஷ்கா… வைரலாகும் படகு பயணப் புகைப்படங்கள்! Read More »

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா !

“கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சூடுபிடிக்கப்பட்டுள்ளுது. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு இணைசேர்ந்துள்ளார். அவர் இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார். மேலும் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தின் முழுக்கதாப்பத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் இந்த …

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா ! Read More »