கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணைந்த தனுஷ்… இன்று படப்பிடிப்பு துவக்கம்!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

கோலிவுட்டில் அதிக படங்களைக் கையில் வைத்துள்ள நடிகர்களில் விஜய் சேதுபதியை அடுத்து தனுஷ் தான் இருப்பார். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல படங்களைக் கையில் வைத்துள்ளார் தனுஷ். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.

அதையடுத்து துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இப்படத்திற்கு ‘D43’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் பாடலுடன் துவங்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலை தனுஷ் பாடியிருக்கிறாராம். மேலும் சமுத்திரக்கனியும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் நடன இயக்குனர் ஜானி தனுஷ் ஒரு பாடலை ஒத்திகை பார்க்கும் படங்களை பகிர்ந்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். தடம் பட நடிகை ஸ்ம்ருதி வெங்கட் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில் தனுஷ் செல்வராகவன் இயக்கத்திலும், பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.