அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள பீட்சா 3 படத்தின் முன்னோட்டம் !

நடிகர் அஸ்வின் காக்கமானு நடிப்பில் உருவாகியுள்ள ‘பீட்சா 3’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய பீட்சா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோர் நடிப்பில் 2013-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் அஷ்வின் இயக்கத்தின் பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படித்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். இப்படம் பீட்சா 3 தி மம்மி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. பவித்ரா மாரிமுத்து இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன் மற்றும் ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இப்படம் பீட்சா படத்தின் தொடர்ச்சி அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.