ஈஸ்வரன் ட்ரைலரில் தனுஷை மறைமுகமாக சாடியுள்ளாரா சிம்பு!?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் ட்ரைலரில் ‘அசுரன்’ குறித்த வசனம் இடம் பெற்றுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளனர்.

Image

நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்பு 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து இப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் என்றே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஈஸ்வரன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் ரொமான்ஸ், ஆக்ஷன் என வின்டேஜ் சிம்புவைப் பார்க்க முடிந்தது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ட்ரைலர் இறுதியில் நீ அளிக்கறதுக்காக வந்த அசுரன்னா நான் காப்பாத்தறதுக்காக வந்த ஈஸ்வரன்டா என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இது தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தைச் சாடுவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மறுபடியும் முதல்ல இருந்தா!

Leave a Comment

Your email address will not be published.